Friday, November 18, 2011

உங்கள் நலம் கேள்விகள் கேள்வி பதில் II




கண்களில் மஞ்சள் நிறம்
1. கண்களில் எல்லோருக்கும் இருக்கும் வெள்ளைப்பகுதி எனக்கு மட்டும் மஞ்சள் நிறமாக (லேசாக) இருக்கிறது. சிலர் லிவர் பிரச்சினை இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். என்ன செய்வது?
உங்கள் கண்களில் அந்த நிறம் ஏற்கனவே வெள்ளையாக இருந்து, இப்போது மஞ்சள் நிறமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் இது மஞ்சள் காமாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். லிவர் என்கிற கல்லீரலில் பிரச்சினை இருக்கலாம் என்று சொல்லப்படுவது உண்மையாக இருக்கலாம்.
மஞ்சள் நிறம் உருவாகக் காரணம் ‘பிலிரூபின்’ என்கிற நிறமி. முதிர்ந்த சிவப்பு அணுக்களில் இருந்து உருவாகிற ஒரு பை-ப்ராடக்ட் இது. தினமும் 1 சதவிகித இரத்த சிவப்பு அணுக்கள் புதியவற்றால் மாற்றப்படுகின்றன. பழைய செல்கள் கல்லீரலில் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகின்றன. இதனால் உருவாகிற பிலிரூபின் உடலில் இருந்து மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் தனக்கு வழக்கமாக வருகிற சிவப்பணுக்களைவிட அதிகமாக வரும்போது சமாளிக்க முடியாமல் மஞ்சள் நிறமிகளை விட்டுவிடுவதால் உடலில் இது அதிகம் சேருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஹெப்படைடிஸ், சிர்ரோனிஸ், கல்லீரல் மற்ற நோய், பைல் குழாய் அடைப்பு, சில நேரங்களில் இரத்தக் குறைபாடுகள்…
இதுதவிர சில க்ளோரம்பெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் மஞ்சள்நிற கண்களை உருவாக்கும்.
கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் இருக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. நிச்சயம் பரிசோதனைகள் அவசியம். கவனியுங்கள்.

நாக்கில் படியும் வெள்ளை
2. எனது வாயில் இருந்து எப்போதும் வழவழப்பான திரவம் சுரந்துகொண்டே இருக்கிறது. நான் என்ன செய்தாலும் இதைத் தடுக்க முடியவில்லை. கூடவே நாக்கில் அழுத்தமாக வெள்ளை படிந்து விடுகிறது. ஜீரம், சளி போன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. என்ன செய்வது?
நீங்கள் இரண்டு முறை பல் துலக்கவும், அடிக்கடி வாய் கொப்பளிக்கவும் பழகிக் கொள்வது நல்லது. மென்மையான டங் கிளினரால் (நாக்கு வழிப்பான்) இரண்டு முறை நாக்கில் படிகிற வெள்ளையை துடைத்து எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்தும் இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கு தொண்டையில் ஏதேனும் நீண்டநாள் தொற்று இருக்கலாம். அல்லது ‘போஸ்ட் நேஸல் ட்ரிப்’ என்கிற பிரச்சினை இருக்கலாம். இதற்கு நீங்கள் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம். தவிர உணவுக்குழாயில் பின்னோக்கி வருகிற அமிலத்தால் ஏற்படுகிற ‘ரிகர்ஜிடேஷன்’ என்கிற பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். உடனே நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

இதய பலவீனம்: கடைபிடிக்க வேண்டியவை
3. எனக்கு வயது 47. சமீபத்தில் ‘ஹார்ட் பெயிலியர்’ இருப்பது கண்டறியப்பட்டது. நான் என்னவிதமான தற்காப்பு செய்யவேண்டும்?
கடுமையான உடல் உழைப்பைத் தவிருங்கள். உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உங்கள் மருத்துவரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும். அதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றுங்கள். நீர் மற்றும் நீராலான பானங்களை கட்டுப்பாடான அளவில் பயன்படுத்துங்கள். இது தவிர உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருதயக் குறைபாடு இடதுபக்கமா, வலதுபக்கமா அல்லது இரண்டிலுமா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உடல் உழைப்பு அளவு உங்களுக்கே சில நாட்களில் தெரிந்துவிடும். பிரச்சினை என்றவுடன் அடிக்கடி படுக்கையில் படுத்திருப்பது நல்லது அல்லது. தவிர வான்வெளிப் பயணம், நீண்டதூர ரயில் பிரயாணம் போன்றவற்றை செயல்படுத்தும்போது அடிக்கடி காலை மடக்கி நீட்டுவது நல்லது. தேவைப்பட்டால் உங்கள் டாக்டரின் உதவியோடு இம்மாதிரிப் பிரயாணங்களுக்கு முன் ஹெப்பாரின் என்ற மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த முடிவு நிச்சயம் உங்கள் டாக்டரால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

முட்டியில் கரகரக் சத்தம்
4. நான் படிகளில் ஏறும்போது அடிக்கடி முட்டியில் ஏதோ கரகரக் என்று சில சப்தங்கள் கேட்கிறது. இதை விட்டுவிடலாமா? அல்லது கவலைப்பட வேண்டுமா?
நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக மூட்டுகள் இம்மாதிரி சத்தங்களை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உருவாக்குவது இயல்புதான். இந்த சத்தங்கள், வலி, வீக்கம், மூட்டு அசைக்கமுடியாமை போன்ற விஷயங்களோடு சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் கவனிக்கவேண்டும். மூட்டில் உள்ள கார்டிலேஜ் அல்லது லிக்மெண்ட் என்கிற இணைப்புத் திசுக்களில் பிரச்சினை இருக்கலாம். மூட்டுத் தேய்மானம் கூட இம்மாதிரி பிரச்சினைகளை உருவாக்கலாம்.

கிட்னி பிரச்சினையில் டயலிஸிஸை தவிர்க்க என்ன வழி?
5. எனக்கு டயாபடிஸ் இல்லை. சமீபத்தில் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்தது. தேவைப்பட்டால் டயாலிஸிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இதைத் தவிர்க்க முடியுமா?
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் வாய்ப்பு இருப்பது பற்றி ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டு அந்த ஆய்வு முடிவு “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிட்னி டிஸிஸிஸ்” என்கிற டாக்டர்களுக்கான புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த புரோட்டின், நிறைய காய்கறிகள், மிருக புரோட்டின் கலக்காத உணவுப் பொருட்கள், அமீனோ அமிலங்கள், வைட்டமின் காம்ப்ளக்ஸ் போன்ற சப்ளிமென்ட்டுகள் கவனமாக ஒரு டயட்டீசியன் உதவியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டால் டயலிஸிஸை தடுக்கவோ, தள்ளிப்போடவோ முடியும் என்று உறுதி செய்திருக்கிறார்கள். முயற்சி செய்வதை நிபுணர்களின் உதவியோடு செய்யுங்கள். கிட்னி பிரச்சினையில் விளையாடக் கூடாது.

பித்தம் குறைய





அரச இலை கொழுந்துகளை கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்த பித்தம் குறையும்.



அரசஇலை கொழுந்து அரசஇலை கொழுந்து அரசஇலை கொழுந்து

அரசஇலை கொழுந்து அரசஇலை அரசமர கொழுந்து


அறிக்குறிகள் :

பித்தம்.
வாந்தி.

தேவையானப் பொருட்கள்:

அரசஇலை கொழுந்து.

செய்முறை:

அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்து பித்ததை குறைக்கும்.

தலைவலி குறைய!



ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.



ஆடாதோடை இலை நல்லெண்ணெய் ஆடாதோடை இலை
ஆடாதோடை இலை நல்லெண்ணெய் ஆடாதோடை இலை

அறிகுறிகள்:

தலைவலி.

தேவையானப் பொருள்கள்:

ஆடாதோடை இலை.
நல்லெண்ணெய்.

செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

முதுகு தண்டுவலி குறைய!




மனோரஞ்சித வேரை பொடித்து தேனுடன் குழப்பி சாப்பிடமுதுகு தண்டுவலி குறையும்.


மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை
மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை

அறிகுறிகள் :


முதுகு தண்டுவலி.

தேவையானப் பொருட்கள்:

மனோரஞ்சித வேர்.
தேன்.

செய்முறை :

மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 2 கிராம் எடுத்து தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட முதுகு தண்டுவலி குறையும்.

Wednesday, November 16, 2011

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்


சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  ,தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்


தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்,காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும்

நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும்.

பத்தியம் ஏதேனும் உண்டா?

வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.

-வின்சென்ட்