Friday, November 18, 2011

உங்கள் நலம் கேள்விகள் கேள்வி பதில் II




கண்களில் மஞ்சள் நிறம்
1. கண்களில் எல்லோருக்கும் இருக்கும் வெள்ளைப்பகுதி எனக்கு மட்டும் மஞ்சள் நிறமாக (லேசாக) இருக்கிறது. சிலர் லிவர் பிரச்சினை இருக்கலாம் என்று பயமுறுத்துகிறார்கள். என்ன செய்வது?
உங்கள் கண்களில் அந்த நிறம் ஏற்கனவே வெள்ளையாக இருந்து, இப்போது மஞ்சள் நிறமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் இது மஞ்சள் காமாலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். லிவர் என்கிற கல்லீரலில் பிரச்சினை இருக்கலாம் என்று சொல்லப்படுவது உண்மையாக இருக்கலாம்.
மஞ்சள் நிறம் உருவாகக் காரணம் ‘பிலிரூபின்’ என்கிற நிறமி. முதிர்ந்த சிவப்பு அணுக்களில் இருந்து உருவாகிற ஒரு பை-ப்ராடக்ட் இது. தினமும் 1 சதவிகித இரத்த சிவப்பு அணுக்கள் புதியவற்றால் மாற்றப்படுகின்றன. பழைய செல்கள் கல்லீரலில் மாற்றம் செய்யப்பட்டு டிஸ்போஸ் செய்யப்படுகின்றன. இதனால் உருவாகிற பிலிரூபின் உடலில் இருந்து மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் தனக்கு வழக்கமாக வருகிற சிவப்பணுக்களைவிட அதிகமாக வரும்போது சமாளிக்க முடியாமல் மஞ்சள் நிறமிகளை விட்டுவிடுவதால் உடலில் இது அதிகம் சேருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஹெப்படைடிஸ், சிர்ரோனிஸ், கல்லீரல் மற்ற நோய், பைல் குழாய் அடைப்பு, சில நேரங்களில் இரத்தக் குறைபாடுகள்…
இதுதவிர சில க்ளோரம்பெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் மஞ்சள்நிற கண்களை உருவாக்கும்.
கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் இருக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது. நிச்சயம் பரிசோதனைகள் அவசியம். கவனியுங்கள்.

நாக்கில் படியும் வெள்ளை
2. எனது வாயில் இருந்து எப்போதும் வழவழப்பான திரவம் சுரந்துகொண்டே இருக்கிறது. நான் என்ன செய்தாலும் இதைத் தடுக்க முடியவில்லை. கூடவே நாக்கில் அழுத்தமாக வெள்ளை படிந்து விடுகிறது. ஜீரம், சளி போன்ற தொல்லைகள் ஏதும் இல்லை. என்ன செய்வது?
நீங்கள் இரண்டு முறை பல் துலக்கவும், அடிக்கடி வாய் கொப்பளிக்கவும் பழகிக் கொள்வது நல்லது. மென்மையான டங் கிளினரால் (நாக்கு வழிப்பான்) இரண்டு முறை நாக்கில் படிகிற வெள்ளையை துடைத்து எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்தும் இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கு தொண்டையில் ஏதேனும் நீண்டநாள் தொற்று இருக்கலாம். அல்லது ‘போஸ்ட் நேஸல் ட்ரிப்’ என்கிற பிரச்சினை இருக்கலாம். இதற்கு நீங்கள் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம். தவிர உணவுக்குழாயில் பின்னோக்கி வருகிற அமிலத்தால் ஏற்படுகிற ‘ரிகர்ஜிடேஷன்’ என்கிற பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம். உடனே நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

இதய பலவீனம்: கடைபிடிக்க வேண்டியவை
3. எனக்கு வயது 47. சமீபத்தில் ‘ஹார்ட் பெயிலியர்’ இருப்பது கண்டறியப்பட்டது. நான் என்னவிதமான தற்காப்பு செய்யவேண்டும்?
கடுமையான உடல் உழைப்பைத் தவிருங்கள். உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உங்கள் மருத்துவரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும். அதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்றுங்கள். நீர் மற்றும் நீராலான பானங்களை கட்டுப்பாடான அளவில் பயன்படுத்துங்கள். இது தவிர உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருதயக் குறைபாடு இடதுபக்கமா, வலதுபக்கமா அல்லது இரண்டிலுமா என்பதைப் பொறுத்து இருக்கிறது. உடல் உழைப்பு அளவு உங்களுக்கே சில நாட்களில் தெரிந்துவிடும். பிரச்சினை என்றவுடன் அடிக்கடி படுக்கையில் படுத்திருப்பது நல்லது அல்லது. தவிர வான்வெளிப் பயணம், நீண்டதூர ரயில் பிரயாணம் போன்றவற்றை செயல்படுத்தும்போது அடிக்கடி காலை மடக்கி நீட்டுவது நல்லது. தேவைப்பட்டால் உங்கள் டாக்டரின் உதவியோடு இம்மாதிரிப் பிரயாணங்களுக்கு முன் ஹெப்பாரின் என்ற மருந்தை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த முடிவு நிச்சயம் உங்கள் டாக்டரால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

முட்டியில் கரகரக் சத்தம்
4. நான் படிகளில் ஏறும்போது அடிக்கடி முட்டியில் ஏதோ கரகரக் என்று சில சப்தங்கள் கேட்கிறது. இதை விட்டுவிடலாமா? அல்லது கவலைப்பட வேண்டுமா?
நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக மூட்டுகள் இம்மாதிரி சத்தங்களை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உருவாக்குவது இயல்புதான். இந்த சத்தங்கள், வலி, வீக்கம், மூட்டு அசைக்கமுடியாமை போன்ற விஷயங்களோடு சம்மந்தப்பட்டிருந்தால் நிச்சயம் கவனிக்கவேண்டும். மூட்டில் உள்ள கார்டிலேஜ் அல்லது லிக்மெண்ட் என்கிற இணைப்புத் திசுக்களில் பிரச்சினை இருக்கலாம். மூட்டுத் தேய்மானம் கூட இம்மாதிரி பிரச்சினைகளை உருவாக்கலாம்.

கிட்னி பிரச்சினையில் டயலிஸிஸை தவிர்க்க என்ன வழி?
5. எனக்கு டயாபடிஸ் இல்லை. சமீபத்தில் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்தது. தேவைப்பட்டால் டயாலிஸிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இதைத் தவிர்க்க முடியுமா?
உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் வாய்ப்பு இருப்பது பற்றி ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டு அந்த ஆய்வு முடிவு “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிட்னி டிஸிஸிஸ்” என்கிற டாக்டர்களுக்கான புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த புரோட்டின், நிறைய காய்கறிகள், மிருக புரோட்டின் கலக்காத உணவுப் பொருட்கள், அமீனோ அமிலங்கள், வைட்டமின் காம்ப்ளக்ஸ் போன்ற சப்ளிமென்ட்டுகள் கவனமாக ஒரு டயட்டீசியன் உதவியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டால் டயலிஸிஸை தடுக்கவோ, தள்ளிப்போடவோ முடியும் என்று உறுதி செய்திருக்கிறார்கள். முயற்சி செய்வதை நிபுணர்களின் உதவியோடு செய்யுங்கள். கிட்னி பிரச்சினையில் விளையாடக் கூடாது.

பித்தம் குறைய





அரச இலை கொழுந்துகளை கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்த பித்தம் குறையும்.



அரசஇலை கொழுந்து அரசஇலை கொழுந்து அரசஇலை கொழுந்து

அரசஇலை கொழுந்து அரசஇலை அரசமர கொழுந்து


அறிக்குறிகள் :

பித்தம்.
வாந்தி.

தேவையானப் பொருட்கள்:

அரசஇலை கொழுந்து.

செய்முறை:

அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்து பித்ததை குறைக்கும்.

தலைவலி குறைய!



ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.



ஆடாதோடை இலை நல்லெண்ணெய் ஆடாதோடை இலை
ஆடாதோடை இலை நல்லெண்ணெய் ஆடாதோடை இலை

அறிகுறிகள்:

தலைவலி.

தேவையானப் பொருள்கள்:

ஆடாதோடை இலை.
நல்லெண்ணெய்.

செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

முதுகு தண்டுவலி குறைய!




மனோரஞ்சித வேரை பொடித்து தேனுடன் குழப்பி சாப்பிடமுதுகு தண்டுவலி குறையும்.


மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை
மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை மனோரஞ்சித இலை

அறிகுறிகள் :


முதுகு தண்டுவலி.

தேவையானப் பொருட்கள்:

மனோரஞ்சித வேர்.
தேன்.

செய்முறை :

மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 2 கிராம் எடுத்து தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட முதுகு தண்டுவலி குறையும்.

Wednesday, November 16, 2011

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்


சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்  ,தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது.

கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்


தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்,காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும்

நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும்.

பத்தியம் ஏதேனும் உண்டா?

வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.

-வின்சென்ட்

உடல் எடை குறைய‌

உடல் எடை குறைய‌,

வாழைத் தண்டைச் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் மிளகு,சீரகம்,பூண்டு,சிறிது எலுமிச்சம் பழச்சாறும் கலந்து மூடிக் கொதிக்க வைத்து உப்பிட்டு, முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனைக் காலை,பகல் உணவுக்கு முன் அருந்தவும்.இவ்வறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் எடை வெகுவாக குறையும்.

புற்றுநோய்க்கு புதிய மருந்து

search
புற்றுநோய்க்கு புதிய மருந்து,லட்சக்கணக்கான மனிதர்களுக்கு எமனாக இருப்பது புற்றுநோய் தான். இந்த நோய்க்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடித்து உள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக அறிஞர்கள் தலைமையிலான சர்வதேச குழு ஒன்று புற்றுநோய் செல்களை கொல்லும் மருந்தை கண்டு பிடித்து உள்ளனர். `கே.ஜி.5' என்ற இந்த புதிய மருந்து புற்றுநோய் செல்கள் பல்கி பெருகாமல் தடுக்கிறது. அதன்பிறகு அந்த செல்களே தங்களை தாங்களே அழித்துக்கொள்கின்றன. இதன்மூலம் இந்த நோயை அழிக்க அந்த மருந்து உதவுகிறது.

இந்த மருந்து புற்றுநோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை தந்து உள்ளது. இது இன்னும் 5 ஆண்டுகளில் மருந்து கடைகளில் கிடைக்கும். இது மாத்திரை வடிவில் கிடைக்கும். இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Monday, November 14, 2011

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!



அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர்.

நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பெண்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.
ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்!

வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்

Sunday, November 13, 2011

ஆபாச படங்களை பார்ப்பதால் ?

பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணி யிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன், பத்திரிகைகள், "டிவி' "டிவிடி' உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது.இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.



மேலும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர்.இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது.ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்.

ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒல்லிக்குச்சி பெண்களுக்கு குழந்தை பிறக்காதா?


குண்டாக இருக்கும் பெண்களை விட சைஸ் ஜீரோ மற்றும் அதை விட மோசமாக மெலிந்திருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

இன்றைய பெண்களிடம், யாரைப் பார்த்தாலும் நான் சைஸ் ஜீரோவாக முயல்கிறேன், இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறேன், வாயைக் கட்டிப் போட்டுள்ளேன் என்று பேசுவது பேஷனாகி விட்டது.

ஒல்லிக்குச்சியாக, எலும்பும் தோளும் தனித்துத் தெரியும் அளவுக்கு மெலிந்து போவதையே பேஷனாக இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். பூசினாற் போல, இருப்பதை பலரும் விரும்புவதில்லை.

ஆனால் இப்படி எலும்பும் தோளுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கல்யாணத்திற்குப் பிறகு கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சிகாகோவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஷெர்பான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாடல் அழகிகளைப் பார்த்து பல பெண்களும் சைஸ் ஜீரோவுக்கு முயலுகிறார்கள். இதற்காக சரியாக சாப்பிடுவது கூட கிடையாது. பட்டினி கிடந்து உடலை வருத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது நான் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

கிட்டத்தட்ட 2500 பேருக்கு நான் செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டுள்ளேன். இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திக்கிறார்கள் என்பது.

மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை. இதனால் அவர்கள் கர்ப்பமாவது பெரும் சிரமமாகி விடுகிறது.

அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் ஓவர் வெயிட்டுடன் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் இயற்கையாக கருத்தரிக்க முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் டாக்டர் ஷெர்பான்.


பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு


இரவு வேளைகளில் தூங்குவது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் வேலை செய்வதனால் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும்.

ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. அதுபோலத்தான் நித்திரையும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான இஸ்கெமிக் ஸ்ட்ரோக் கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோர் முறையே 14 சதவீதம், 24 சதவீதம் மற்றும் 70 சதவீதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூக்கத்தைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இயற்கையாகக் கிடைக்கும் இஞ்சியின் மகிமை அளப்பெரியது


உணவுகளிற்கு சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள்.

பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது. இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.

இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு.

கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு. சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும். இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம்.

கொடிளிலே சிறந்தது அவரைக்காய்

*கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை.புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

*மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது.

*வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

*நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

*இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.